தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
வெள்ளிவிழா

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
என்னும் இரு பழமொழிகளுக்கேற்ப தன் வாழ்வை அமைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக செயல்படும் ஏ.கே. ராஜகோபலன்.
உயர் திரு ஏ.கே. ராஜகோபாலன் அவர்களும், அவருடைய இல்லத்தரசி கலா என்கிற மாலினி அவர்களும் (22/08/2008) வெள்ளிக் கிழமை அன்று தங்களுடைய 25வது மண நாளை மிக எளிமையாக, ஆனால் இனிமையாகக் கொண்டாடினர். அவர்கள் இருவரும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் பொன்மொழிக்கேற்பத் தங்கள் வாழ்வை எளிமையாக, ஆனால் சிறப்பாக அமைத்துக்கொண்டுள்ளனர். நற்பண்புகள் பல நிறைந்த திரு ஏ.கே.ஆர். என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திரு ஏ.கே. ராஜகோபாலன் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு நற்பண்புகள் நிறைந்த எளிமையான, புன்சிரிப்போடு கூடிய நல்ல மனைவியாக திருமதி மாலினி அவர்கள் அமைந்திருக்கிறார். இந்த இனிமையான தம்பதிகளுக்கு இரு குழந்தைகள். மகன் பெயர் சந்தோஷ், மகள் பெயர் ஐஷ்வர்யா. இருவரும் மிக அடக்கமான, அழகான குழந்தைகள். நன்கு படிக்கிறார்கள், மேலும் இசை, ஓவியம், நடனம் போன்ற பல கலைகளைக் கற்று வருகின்றனர். அது மட்டுமல்ல திரு ஏ.கே.ஆர். அவர்கள் இணையதள அமைப்புகள் செய்யும்போது அவருக்குப் பக்க பலமாக கூடவே உதவி செய்கின்றனர். அவர்களின் நல்ல மனதுக்கு அவர்கள் குடும்பம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வளமாகவும் நலமாகவும் முன்னுக்கு வர இறைவனைப் ப்ரார்த்தனை செய்வோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ