தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - அந்தத்
தமிழெங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழ்க் குழுமக் குழந்தைகள்
அன்புள்ள நண்பர்களே,
முத்தமிழ் பிரவாகம் குழும சந்திப்பு சென்னையில் நடந்த போது திருமதி விசாலம் அவர்களின் மகன் ராஜா நடேசன் அவர்களும் அவரின் துணைவியார் திருமதி கமலினி அவர்களும் அவர்களுடைய இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். அந்தக் குழந்தைகள் இருவருமே அழகுடன், புத்திசாலித்தனமும் நிறைந்திருந்தனர்.
அந்தக் குழந்தைகளான திருமதி விசாலம் அவர்களின் பேரன் சைதன்யா, மற்றும் பேத்தி அம்பிகா இருவரும் அன்று, "மாமவது ஸ்ரீ ஸரச்வதி காமகோடி பீட நிவாசினி" என்கிற தீக்ஷிதர் கிருதியை இந்தோள ராகத்தில் ஆதி தாளத்தில் பாடினர். அவர்கள் பாடும் போது ஒலிவாங்கி சரியாகப் பொருத்தப் படாததால் அவர்கள் இருவருமே கொஞ்சம் திகைத்தனர். அதன் பிறகு நான் மேடையேறி ஒலிவாங்கியை சரி செய்தவுடன் மிக நன்றாகப் பாடினர்.
அதில் விசேஷம் என்னவென்றால், சபைக்கூச்சமே இல்லாமல் மிக இயல்பாகப் பாடினர் என்றால் மிகையாகாது. அந்தப் பெண் குழந்தை அம்பிகா அவள் படிக்கும் பள்ளியில்
படிப்பிலும் இசையிலும் முதல் பரிசுகள் பெற்றுத் தலைமை வகிக்கிறாள், அத்துடன் பியானோ என்னும் இசைக் கருவியை நன்றாக இசைக்கத் தெரிந்தவர், நடனத்திலும் சிறந்தவர், மேலும் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இரண்டையும் முறைப்படி கற்றுக் கொள்கிறார். நீச்சல் தெரியும், அதுவும் தவிற நடிக்கவும் செய்வாராம்.
இரு குழந்தைகளும் எல்லாவிதமான திரைப்படப் பாடல்களையும், பழைய, புதிய பாட்டுக்களையும் பாடவல்லவர்கள். இருவரும் ஆங்கில, கன்னட பாஷைகளீன் வழியே கல்வி பயின்றபோதும் தமிழையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சைதன்யா அவர்கள் நடிப்பிலும், சாஸ்திரிய இசை பாடுவதிலும், மெல்லிசை பாடுவதிலும் மற்றும் கிடார் என்னும் வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர், அந்த இரு குழந்தைகளும் இன்னும் பல கலைகளில் தேர்ந்து படிப்பிலும் சிறப்புற இறைவனை வேண்டுவோம்.
விழாவிற்கு வந்திருந்த திரு ஏகேஆர் அவர்களின் புதல்வி ஐஸ்வர்யா, புதல்வன் சந்தோஷ் இருவரும் மிக நன்றாகப் படிக்க்க் கூடியவர்கள், அவர்களும் அங்கு வந்திருந்தனர். இருவருமே திரு ஏ.கே.ஆர். அவர்களுக்கு கணிணியில் தமிழ்ப் படைப்புகளை பக்கங்களாக்க மிகவும் உதவுகின்றனர். மிகவும் புத்திசாலியான குழந்தைகள், மிக நன்றாக ஓவியம் வரைபவர்கள். நிலாச்சாரல் மற்றும் மழலைகள்.காம் இணையதளங்களில் இவர்கள் வரைந்த ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஐஸ்வர்யா முறைப்படி பரதநாட்டியம் கற்று வருகிறார். விரைவில் அரங்கேற்றம் நடக்கவுள்ளது. சந்தோஷ் முறைப்படி மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். விரைவில் வித்துவானாவார் என எதிர்பார்க்கலாம்.
மஞ்சூர் ராஜா, அவர் மனைவி இருவரும் அவர்களுடைய குழந்தை மனஸ்வினியை அழைத்து வந்தனர். அந்தக் குழந்தையும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண்
மற்றும் அந்தக் குழந்தை நன்றாகப் பாடுவாள், நடனம் ஆடுவாள், மிமிக்ரி செய்வாள். பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுப் பரிசுகலும் வென்றிருக்கிறாள்.
அனைத்துக் குழந்தைகளும் மிக நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வர இறைவனைப் ப்ரார்த்தனை செய்வோம். இனி வரும் கூட்டங்களில் அங்கு வரும் குழந்தைகளின் திறமைகளை வளர்க்கும் விதமாக, ஊக்குவிக்கும் விதமாக, அந்தக் குழந்தைகளைப் பாராட்டுவதும் நம் கடமை, மற்றும் அவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக
ஏதேனும் பரிசுகள் கூட அளிக்கலாம் என்பது என் கருத்து.
அன்புடன்
தமிழ்த்தேனீ