தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - அந்தத்
தமிழெங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழ்க் குழுமக் கூட்டம்
புகைப் படங்கள்

|
அன்புள்ள நண்பர்களே நேற்று நடைபெற்ற தமிழ்க் குழுமங்களின் சந்திப்பு இனிதே நடை பெற்றது.
முதன் முதலாக அனைத்துக் குழுமங்களின் உறுப்பினர்களும் சந்திக்கும் கூட்டமாதலால் ஒருவரை ஒருவர் முதன் முதலாக நேரில் சந்திக்கும் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது
மிக மகிழ்ச்சியான தருணங்கள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது
தலைமை ஏற்று நடத்திய உயர் திரு அப்துல் ஜப்பார் மற்றும் திரு அண்ணா கண்ணன் அவர்கள் இருவருமே தொழில் நுட்பத்திலும், அனுபவத்திலும் மிகச் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக அவர்கள் அளித்த செய்திகள் வியப்பூட்டுபவையாக அனைத்து தரப்பினருக்கும் உபயோகமான பொது நோக்கு கொண்ட கருத்துக்களாக இருந்தன.
திரு அப்துல் ஜப்பார் எப்படிப்பட்ட மனித நேயமிக்க ஒரு நல்ல மனிதர் என்று அங்கு தெரிந்தது, அது மட்டுமல்ல அவ்வளவு அனுபவத்தையும் விசாலமான அறிவுததிறனையும்
உள்ளடக்கிக் கொண்டு எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் "நிறை குடம் நீர் தளும்பல் இல்".
அதேபோல் திரு அண்ணாகண்ணன் அவர்கள் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்? நல்ல சேவை அவருடையது. அமைதியான ஆழமான கருத்துக்களை கூறும் இவர் பல புதுமைகளை வரவேற்று தமிழுக்கு தொண்டு செய்வதில் காட்டிவரும் ஆர்வம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மொத்தத்தில் தமிழ் வளலர்க்க இவ்வளவு பேர் ஒன்றாகக் கூடும் இடங்கள் நல்ல தமிழ்ச்சங்கமே மற்றும் மழலைகள்.காம் நடத்துனர் உயர் திரு ஏகேஆர். என்று செல்லமாக அழைக்கப்படும் திரு ஏ.கே. ராஜகோபாலன் அவர்களும் சிறப்பு உரை ஆற்றினார், விசாலம் அவர்களும் அவரின் பிள்ளை மருமகள், பேரன், பேத்தியுடன் வந்திருந்தார்கள்.
திருமதி ருக்மணி அவர்கள் உரை ஆற்றினார். விசாலம் அவர்களின் பேரனும் பேத்தியும் மேடையில் பாட்டுக்கள் பாடினர்/
கடைசியில் முடிவுறை சகோதரி சீதாலக்ஷ்மி அவர்கள் வழங்கினார். சகோதரி லாவண்யா அவர்கள் அவ்வப்போது அறிவிப்புகள் கொடுத்து முத்தமிழ் ஆண்டு விழா
போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சூரார் பேசும் போது அடுத்த கூட்டத்தை இதைவிட சிறப்பாக நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார்.
விழியனும் அவர் மனைவியும், வெற்றி நடை ஆசிரியர் பாலமுரளியும், தேவர்பிரான் கிருஷ்ணன்,போன்ற இளைஞர்களும் மற்றும் பலரது பெயர்கள் நேரமின்மையால் குறிப்பிட முடியவில்லை மன்னிக்கவும் மென் தமிழ் வெளியீட்டு விழாவும் நடை பெற்றது.
கூட்டம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தேறியது. வாழ்க நற்றமிழர் கூட்டம் திரு மணியம் அவர்கள் பேசும்போது உலக அளவிலே இணையத் தமிழர் பங்கு கொள்ளும் இணையங்கள், இணைய எழுத்துக்கள் என்று ஒப்பிட்டால் தமிழ்மொழி 1 சதவிகிதமே என்றார். இன்னும் உலக அளவிலே தமிழைஎடுத்துச் செல்ல வேண்டிய உண்மைகளைச் சொன்னது திரு டாக்டர் பீ. சந்திர போஸ் அவர்கள் தினமலர் கம்யூட்டர் மலர் எப்படி உருவானது என்று உரைத்தார். கம்யூட்டர் மலரின் நோக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார். வே ஓம் சுப்ரமணியம் அவர்கள் அவர்களும் வந்திருந்து சிறப்பித்தார்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ